அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Parthasarathy Swamy Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000005]
×
Temple History
இலக்கிய பின்புலம்
சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் ஒன்றாக விளங்குகிறது, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருக்கோயில் பல்லவ சாம்ராஜ்ய அரசர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் என்றும் தமிழில் திரு-அல்லி-கேணி என்றும் பெயர் பெற்ற இந்த திருத்தலம் தற்பொழுது திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலாக திருப்பதி, திருத்தணி மற்றும் திருவள்ளூரிலிருந்து வரும் பக்தர்கள் இந்த திருத்தலத்தில் வழிபாடு செய்து வருகிறார்கள்.
பிரம்மாண்ட புராணத்தின் படி இத்திருக்கோயிலில் கொலுவிருக்கும் ஐந்து தெய்வங்களை - பஞ்ச ரிஷிகள் (ப்ருகு , மதுமான், அத்ரி. , சுமதி, மற்றும் சப்தரோம ) வழிபாடு செய்திருக்கிறார்கள். மற்றும் வைணவ ஆழ்வார்களில் முன்னவர்களான...சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் ஒன்றாக விளங்குகிறது, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருக்கோயில் பல்லவ சாம்ராஜ்ய அரசர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் என்றும் தமிழில் திரு-அல்லி-கேணி என்றும் பெயர் பெற்ற இந்த திருத்தலம் தற்பொழுது திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலாக திருப்பதி, திருத்தணி மற்றும் திருவள்ளூரிலிருந்து வரும் பக்தர்கள் இந்த திருத்தலத்தில் வழிபாடு செய்து வருகிறார்கள்.
பிரம்மாண்ட புராணத்தின் படி இத்திருக்கோயிலில் கொலுவிருக்கும் ஐந்து தெய்வங்களை - பஞ்ச ரிஷிகள் (ப்ருகு , மதுமான், அத்ரி. , சுமதி, மற்றும் சப்தரோம ) வழிபாடு செய்திருக்கிறார்கள். மற்றும் வைணவ ஆழ்வார்களில் முன்னவர்களான ஸ்ரீ பேயாழ்வார் , ஸ்ரீ திருமழிசையாழ்வார் பாடல் பெற்றதாகும். அதே போல் ஆழ்வார்களில் கடையவரான திருமங்கையாழ்வாராலும் (476 . ) பாடப்பட்ட தலமாகும்.
இத்திருக்கோயிலின் மூலவர் ஸ்ரீ வேங்கடகிருஷ்ணஸ்வாமி ஸ்ரீ கீதாச்சார்யா எனவும் அழைக்கப்படுகிறார். ப்ரம்மாண்ட புராணத்தின்படி, சுமதி மகாராஜா ஏழுமலையானான திருவேங்கடவனிடத்தில் மஹாபாரத போரின் பொழுது அர்ஜுனனுக்கு தேரோட்டியாக விளங்கிய திருக்கோலத்தில் சேவை சாதிக்க பிரார்த்தித்ததன் பயனாக அவனது கனவில் தோன்றி ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் சென்று எனது தரிசனத்தை காணலாம் என்கிறார்.அதே சமயம் ஆத்ரேய மகரிஷி தனது ஆச்சார்யனிடத்தில் தவம் செய்ய ஏற்ற இடத்தை வினவ, சுமதி ராஜா தவம் செய்து வந்த கைரவீனி தீர்த்தக்கரையும் துளசி காடாகவும் இருந்த ப்ருந்தாரண்யத்தை காண்பித்து, ஒரு கையில் சங்கமும் மற்றோரு கையை தனது திருவடியை நோக்கி (சரம ஸ்லோகத்தை உணர்த்தும் விதமாக) காண்பித்தவாறு இருக்கும் ஒரு திவ்ய மங்கள விக்கிரஹத்தை ஆத்ரேய மகரிஷியிடம் கொடுத்தார் வேதவியாசர்.
சரம ஸ்லோகம் :
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுஷ:
வேதவியாசரின் சொல்லிர்க்கேற்ப ஆத்ரேய மகரிஷி,விக்கிரஹத்தை மகிழ்ச்சியுடன் பெற்று சித்திரை மாதத்தில் வைகானஸ ஆகமத்தின் படி பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.
நடுவில் ஸ்ரீ வேங்கடகிருஷ்ண ஸ்வாமி நிற்க, ஒரு புறம் ஸ்ரீ ருக்மணி தாயார் மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் ப்ரத்யும்னனும் பேரன் அநிருத்தனும் நிற்கிறார்கள். இவர்கள் பஞ்ச வீராள் என்றழைக்கப்படுகிறார்கள் .
மிகவும் ஆச்சர்யமான மற்றும் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சேவை சாதிக்கும் உற்சவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் திருமுகத்தில் பாரதப் போரில் பீஷ்மரால் எய்யப்பட்ட அம்புகளின் தழும்புகளை இன்றும் காண முடிவது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.